தேனியில் டாஸ்மாக் கடையில் சம்பவம்…! உயிர் பயத்தில் மதுப்ரியர்கள்

19 August 2020, 9:30 am
Corona Tasmac - Updatenews360
Quick Share

தேனி: தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட, குடிமகன்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கம்பம் பகுதியில் பேருந்து நிலையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையில் எப்போது வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

அந்த கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அண்மையில் தம்மை  கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந் நிலையில் அவர் வழக்கம் போல டாஸ்மாக் கடையை திறக்க வந்துள்ளார்.

ஆனால் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்று உறுதியான விவரத்தை அந்த ஊழியருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

அவருடைய சகா ஊளியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் இன்னமும் வெளியாக வில்லை. இந்த விவரத்தை கேள்விப்பட்ட  மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்குமோ என்ற எண்ணத்தில் பீதியில் உள்ளனர்.

Views: - 32

0

0