டாஸ்மாக் வருமானம் மட்டுமே ரூ. 30 ஆயிரம் கோடி…! நிதித்துறை தகவல்…!

14 February 2020, 5:08 pm
tasmac-leave-udpatenews360
Quick Share

சென்னை: தமிழகத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறி உள்ளார்.

தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிறுவனமும், மதுக்கடைகளும் மூலமும் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. மதுக்கடைகள் மூலமாக 2019 – 20 நிதியாண்டில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.

இதனை நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:  தமிழக அரசின் பட்ஜெட்டில் 2 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பாலான வருவாய் டாஸ்மாக்கால் வருகிறது.

அண்மையில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வருவாய் உட்பட 12, 263 கோடி வர வேண்டும்.

இந்த 2 தொகைகளும் அரசுக்கு வந்தால், மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தலாம். வரவை விட செலவு அதிகம் இருப்பதால், வருவாய் பற்றாக்குறை உயர்ந்து கொண்டே போகிறது என்று கூறியிருக்கிறார்.