நள்ளிரவு நேரத்தில் ஆபாச எஸ்எம்எஸ் : ஆசிரியைகளுக்கு வீசிய பாலியல் வலை..சிக்கிய வரலாற்று ஆசிரியர்!!

Author: Aarthi Sivakumar
4 December 2021, 6:04 pm
Quick Share

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் அரசுப்பள்ளி பெண் ஆசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதே பள்ளியை சேர்ந்த வரலாற்று ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பிர் இருந்து 10ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு வரலாறு பாடம் நடத்தி வந்தவர் ஆசிரியர் சந்திரன்.

போகலூர் ஒன்றியம் நாகாச்சி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சந்திரன் பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகளை இச்சையுடன் பார்க்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார். இவர், பள்ளி முடிந்ததும் நன்றாக குடித்துவிட்டு, இரவு நேரத்தில் ஆசிரியைகளுக்கு போன் செய்து ஆபாசமாக வர்ணிப்பது போன்ற சேட்டைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னை திட்டி தீர்க்கும் ஆசிரியைகளின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இவரை, பலமுறை எச்சரித்தும் திருந்தாத ஆசிரியால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஆசிரியை ஒருவர், தனது கணவருடன் சேர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, ஆசிரியர் சந்திரனை பிடித்து போலீசார் விசாரித்த போது, தனது தவறையும் உணராமல் கூலாக இருந்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்திரனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற போது, எவ்வித கூச்சமும் இல்லாமல், புதுமாப்பிள்ளை போல வேனில் ஏறி சென்றார் சந்திரன்.

இதையடுத்து, வரலாற்று ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 199

0

0