பேனா பிடிக்க வேண்டிய கையில் கத்தி…கதிகலங்கி போன ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க கோரி முதன்மை கல்வி அலுவலகத்தில் தஞ்சம்..!!

Author: Rajesh
19 March 2022, 5:55 pm

உத்தமபாளையம்: தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதால் அச்சமடைந்தனர். இதனால் பாதுகாப்புக்கோரி தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 900க்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுகின்றன.

ஏறக்குறைய ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கும் தேனி மாவட்டத்தில், சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனியில் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களால் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் தேவாரம் பள்ளியில் புத்தகம் கொண்டுவர கூறிய ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். ஜி.கல்லுப்பட்டியில் மாணவர்கள் ஒன்றுகூடி ஆசிரியர்களை கிண்டல் செய்துள்ளனர். மேலும் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் கத்தியுடன் வகுப்புக்குள் வந்து ஆசிரியரை குத்த முயன்றார்.

அந்த மாணவரைக் கண்டித்ததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக பள்ளிக்கு வந்த அந்த மாணவன் கத்தியைக் காட்டி ஆசிரியரை மிரட்டியதாககவும், மேலும் அந்த மாணவனுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த சிலர் மிரட்டல் விடுப்பதாவும் சொல்லப்படுகிறது

இதுகுறித்து தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. மாணவரை விசாரித்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் பள்ளிக்கு கத்தியுடன் வந்து போலீசார் முன்னிலையிலேயே ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தற்போது ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!