திருமணம் ஆன 8 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: வரதட்சணை கொடுமையால் நேர்ந்த விபரீதம்..!!

Author: Rajesh
3 August 2021, 1:17 pm
Quick Share

சென்னை: தாம்பரம் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பனையூரைச் சேர்ந்தவர் பிரமோத். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்நேகா. இவர்களுக்குத் திருமணமாகி 8 மாதங்களே ஆகின்றன. திருமணத்தின் போது பிரமோத்துக்கு 15 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் வரதட்சணையாக தரப்பட்டது. இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான பிரமோத், மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வரதட்சணை கேட்டு மனைவி ஸ்நேகாவை கணவர் பிரமோத் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவருடன் கோபித்துக் கொண்டு சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஸ்நேகா வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரமோத் தொலைபேசி மூலம் ஸ்நேகாத் தொடர்பு கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மன உளைச்சலில் இருந்த ஸ்னேகா, தனது அறைக்குள் சென்று பூட்டி கொண்டார். காலை வெகுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து போது ஸ்நேகா தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் போலீசார் அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சணைக் கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்நேகாவின் தந்தை ரவி பொலிசில் புகார் செய்தார். இதையடுத்து, பிரமோத்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 385

0

0