திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் இளம்பெண் தற்கொலை : மாமியார் உட்பட 3 பேர் கைது!!

4 May 2021, 7:41 pm
Kanchi Woman Dead -Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் மாமியார் மாமனார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூர் கிராமத்தில் வசிப்பவர் கோபி. இவருடைய தங்கை மலர்விழி (வயது 31).

தங்கை மலர்விழியை ஒரு ஆண்டுகளுக்கு முன்பு மருதம் கிராமம் பிராமணர் தெருவில் வசிக்கும் மாரிமுத்து கண்ணகி என்பவர்களுடைய மகன் கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மலர்விழி அண்ணன் வீட்டில் நடக்கும் காது குத்தல் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு வாரத்துக்கு முன் குடும்பத்தினருடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்றுள்ளார்.

இதில் அண்ணன் வீட்டில் சீர்வரிசை செய்வதில் மலர்விழிக்கும் மாமியார் கண்ணகிக்கும் பிரச்சனை ஏற்பட்டு ஒருவாரமாக இல்லத்தில் சமையல் செய்வதில் இருவருக்குள்ளும் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.

இதில் மனம் உடைந்த மலர்விழி கணவரிடம் பிரியாணி வாங்கி வர சொல்லி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மலர்விழியின் கணவர் கார்த்திகேயன், மாமனார் மாரிமுத்து, மாமியார் கண்ணகி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி ஒரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

Views: - 89

0

0