கோவை நோக்கி படையெடுத்த கோவில் யானைகள் : நாளை புத்துணர்வு முகாம் தொடக்கம்!!

7 February 2021, 11:53 am
Elephant Camp - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் தேக்கம் பட்டியில் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக யானைகள் வரத்துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில்யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டு தோறும் இந்துசமய அறநிலையத் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது

இந்தாண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை முதல் துவங்கி 48நாட்கள் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, யானைகள் மற்றும் யானையை பாகங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் யானை கொட்டகைகள், பாகன்கள் தங்குமிடம் உணவு கூடம் யானைகள்குளிப்பதற்கு ஷவர் பாத் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள முகாமில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை யானை முகாமிற்கு முதலாவதாக வந்து சேர்ந்தது.

லாரியின் மூலம் வந்த யானையை அறநிலையத்துறை அதிகாரிகள் உடல் எடை சரிபார்க்கப்பட்டதுடன் யானை மற்றும் பாகங்களுக்கு கொரானோ பரிசோதனை மேற்கொண்ட ஆவணங்களை சரிபார்த்து அதிகாரிகள் முகாமிற்குள் அனுமதித்தனர். இன்று மாலைக்குள் அனைத்து கோவில் யானைகளும் முகாமிற்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Views: - 0

0

0