கீழமை நீதிமன்றங்கள் செயல்பட தற்காலிகத் தடை : நீதிபதி மரணத்தால் உயர்நீதிமன்றம் நடவடிக்கை!!

17 May 2021, 7:02 pm
Chennai HC Order - Updatenews360
Quick Share

கீழமை நீதிமன்ற பணிகளை தற்காலிகமாக நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2வது அலையால் தமிழகம் மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. ஒரு நாளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழப்புகளும் 300க்கும் மேல் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட நீதிபதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீமிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் கோரிக்கை பரிசீலனை உள்ள நிலையில் நெல்லை மவாட்ட நீதிபதி நீஷ் உயிரிழந்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார்.

கைதிகளை சிறையில் அடைக்கும் நடைமுறையை தவிர மற்ற பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வர தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

நீதிபதிகளின் முன் அனுமதியைப் பெற்ற பிறகே நீதிமன்றத்திற்கு வர வேண்டும். தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்றக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 103

0

0