‘விவசாயி தூக்குல தொங்காம என்ன பண்ணுவான்’… கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகள்.. கண்ணீர் விடும் MBA பட்டதாரி விவசாயி!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 4:30 pm

வியாபாரிகளால் விவசாயிகள் ஏமாற்றப்படுவதாகவும், விவசாயின் நெஞ்சை கீறி ஈரலை திங்கும் நிலை உள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள MBA பட்டதாரி விவசாயி ஒருவர், பல ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். தக்காளியானது நல்ல விளைச்சல் ஏற்பட்ட நிலையில் அதனை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து ரூ.15க்கு கொள்முதல் செய்கின்றனர்.

ஆனால் மக்களிடம் கொண்டு செல்கையில் ரூ60க்கு மேல் விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு தக்காளி விவசாயத்திற்கு ரூ.20,000 மேல் தான் செலவு செய்து உள்ள நிலையில், ரூபாய் 4000 கூட வருமானம் ஈட்டவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கொள்ளை லாபம் அடிக்கும் நிலையில், அரசு ஏன் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இச்செயல்கள் விவசாயின் நெஞ்சை கீறி ஈரலை திங்கும் நிலை உள்ளதாக விவசாயி வேதனை மல்க தெரிவிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?