ஊசி மூலம் போதை… பட்டப்பகலில் மாத்திரையுடன் வாலிபர் செய்த ஷாக் சம்பவம் : விசாரணையில் பகீர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 4:45 pm
Drugs - Updatenews360
Quick Share

கோயம்புத்தூரில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன .

இந்த நிலையில் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது ஒரு பகுதியில் வாலிபர் ஒருவர் போதை பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தரப்பட்டன. போலீசார் தணிக்கை தீவிர படுத்திய நிலையில் சந்தேகத்திற்கு இடமான வாலிபரை பிடித்திருக்கின்றனர்.

அவரை பிடித்து விசாரித்த பொழுது அவர் போதை பொருள் விற்று வந்தது தெரிய வந்தன. டெரஸ் ஷெட் அமைக்கும் கூலி தொழிலாளியான நவ்சாத் என்ற நபரே இந்த போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தன.

உடனடியாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் நவசாத்திடமிருந்து நைட்ரோஜன் உள்ளிட்ட 46 மாத்திரைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர் .

போதைக்காக இந்த மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவது தெரிய வந்தன . கைது செய்யப்பட்ட நவ்சாத் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.

போதைப் புழக்கத்தை தடுக்க தனிப்படை போலீசாரின் நடவடிக்கை தீவிர படுத்தப்படும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் புழக்கம் அதன் பழக்கம் உடல் நலத்திற்கும் பொது நலத்திற்கும் சமூகத்திற்கும் கேடு என்பதை உணர்ந்து அதற்கு அடிமையானோர் மீற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

Views: - 217

0

0