சாலையில் சென்ற காரில் கரும்புகை வந்ததால் பதற்றம் : சிறிது நேரத்தில் தீ பிடித்து முழுவதும் சேதம்… அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 6:09 pm

திருக்கோவிலூர் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனது காரில் திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

காரை அவரது உறவினரன டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் ஓட்டிச் சென்றார். அப்போது, தொட்டி கிராமத்தின் அருகில் காரில இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது

இதனால் பயந்துபோன ஓட்டுநர் சிவராஜ் காரை சாலையோரம் நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை தொடர்ந்து, கோவிந்தன், சிவராஜ் மற்றும் காரில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்து இறங்கி. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இந்த நிலையில் மளமளவென தீப்பிடித்து எரிந்த காரை திருக்கோவிலூர் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து அனைத்தனர். தீப்பிடித்ததில் கார் முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!