சினிமா படப்பிடிப்புக்கு பொருட்கள் வாடகைக்கு விடும் குடோனில் பயங்கர தீ விபத்து : தீயை அணைக்க போராடிய வீரர்கள்!!

Author: Udayachandran
4 August 2021, 7:05 pm
Massive Fire - Updatenews360
Quick Share

சென்னை : மதுரவாயலில் சினிமா படப்பிடிப்புக்கு செட் அமைக்க பொருட்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை வானகரம் சர்வீஸ் சாலையில் உள்ள பிலிம் டெக்கர்ஸ் என்ற நிறுவனத்தில் உள்ள குடோனில் சினிமா படப்பிடிப்புக்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு குடோனில் இருந்து அதிக கரும்புகை வெளியேறியது. இதையடுத்து பயங்கர தீ விபத்தை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஸ்கை லிப்ட் என்னும் ராட்சத வாகனம் மூலம் பயங்கர தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர். பயங்கர தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்த மேகங்களாக காட்சியளித்தது.

Views: - 156

0

0