பனியன் குடோனில் இடி விழுந்து பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!

4 November 2020, 3:16 pm
tirupur godown Fire - Updatenews360
Quick Share

திருப்பூர் : இடி விழுந்து தீ விபத்து ஏற்பட்டதில் பனியன் குடோனில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்த திலீப்குமார் திருப்பூர் 60 அடி ரோட்டில் பனியன் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல வேலைகளை முடித்து விட்டு குடோனை பூட்டி சென்றுள்ளார்.

இந்த நிலையில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அந்த மழையின் போது வந்த இடி பனியன் குடோன் மீது இறங்கி அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அருகிலிருந்தவர்கள் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகள் தீயில் கருகி சேதமடைந்தது. இது குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 27

0

0