திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.3 கோடி பொருட்கள் எரிந்து நாசம்!!

13 January 2021, 8:15 pm
Tirupur Fire - Updatenews360
Quick Share

திருப்பூர் : பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூர் பகுதியில் சரவணமுத்து என்பவருக்கு சொந்தமான பனியன் துணி அரவை செய்யும் பேப்ரிக்கேசன் நிறுவனம் உள்ளது. பொங்கல் பண்டிகை நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நண்பகல் பன்னிரெண்டு மணியளவில் நிறுவனத்திலிருந்து புகை வந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் வந்து பார்க்கும் பொழுது பேப்ரிகேசன் நிறுவனம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரு வண்டிகள் மாலை ஐந்து மணி வரை தீயை போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 27 இயந்திரங்கள், அறுபதாயி்ரம் கிலோ பனியன் துணிகள், முப்பதாயிரம் கிலோ நூல்கள், கட்டிடம் முற்றிலும் எரிந்து சேதமாயின. எரிந்து போன பொருட்களின் மதிப்பு மூன்று கோடி வரை இருக்கலாம் என தெரிகிறது. வழக்கு பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.