ரூ. 380 கோடியில் உருவாக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் : 21ம் தேதி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

19 November 2020, 6:02 pm
thervoy kandigai reservior - updatenews360
Quick Share

சென்னை : திருவள்ளூரில் உருவாக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர்தேக்கம் வரும் 21ம் தேதி மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.380 கோடி செலவில் 1,485 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட நீர்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து இந்த நீர்தேர்க்கம் அமைக்கும் பணி நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை ஜுரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி – கண்டலேறு கால்வாயில் இருக்கும் தண்ணீரை கண்ணன்கோட்டை நீர்தேக்கத்திற்கு கொண்டு வர சுமார் 9 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் வரும் 21ம் தேதி மக்களின் பயன்பாட்டிற்காக தேர்வாய் கண்டிகை நீர்தேக்கம் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த புதிய நீர்தேக்கத்தில் சுமார் 500 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

Views: - 0

0

0

1 thought on “ரூ. 380 கோடியில் உருவாக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் : 21ம் தேதி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

Comments are closed.