டெட் தேர்வு எழுதி 7 ஆண்டுகள் நிறைவு செய்தால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

1 September 2020, 12:37 pm
sengottaiyan - updatenews360
Quick Share

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து 7 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வில் நூலகங்கள் திறக்கப்படலாம் என தமிழக அரசு அனுமதித்ததை தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- 160 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மட்டும் 3,785 நூலகங்கள் திறக்கப்பட்டன. புதிய கல்வி கொள்கை தொடர்பான குழு அமைப்பது பற்றி முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். பள்ளிகள் இப்போது திறக்கப்படும் சூழல் இல்லை.

ஆசிரியர் தகுதி தேர்வான டெட்-டில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குதான் செல்லும். அவர்கள் மீண்டும் தேர்வை எழுதிதான் புதுப்பிக்க வேண்டும், எனக் கூறினார்.

2013ல் தேர்ச்சி பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்குமாறு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Views: - 8

0

0