கோவையில் அரசு சுவர்களை அலங்கரிக்கும் தமிழர் பாரம்பரிய ஓவியங்கள்: முக்கியத்துவம் பெறும் விவசாய படைப்புகள்..!!

Author: Aarthi Sivakumar
7 August 2021, 3:15 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவகங்களின் சுற்று சுவர்களில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

கோவை நகர் பகுதியில் அரசு அலுவலக சுவர்கள், பாலங்கள், சாலையோர சுவர்கள் மற்றும் காலியிடங்களில் அரசியல் கட்சி போஸ்டர்கள், தனி நபர் போஸ்டர்கள், தனியார் நிறுவன விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

வாகன ஓட்டிகள் முகத்தை சுளிக்கும் வகையிலும், கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.

இதையடுத்து முதற்கட்டமாக மாநகராட்சி அலுவலக சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்களை வரைய மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

அதன்படி மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக சுவற்றில் இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த சுவர் ஓவியத்தில் மண்பாண்டம் தயாரித்தல், விவசாயம், கூடை பின்னுதல், பழங்கால இசைக்கருவிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதேபோல் அனைத்து மாநகராட்சி அலுவலக சுவர்களிலும் பொதுமக்களை கவரும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட உள்ளன.

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்களை பெற்றுள்ளது.

ஓவியங்கள் வரையப்பட்ட சுவர்கள் மீது போஸ்டர் ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 394

0

0