2 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்கு பழி… அண்ணனை கொலை செய்தவரை அதே இடத்தில் கொலை செய்த தம்பி… தஞ்சையில் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 4:37 pm

அண்ணனை கொலை நபரை அதே இடத்தில் 2 வருடத்திற்கு பிறகு வெட்டி பழிக்கு பழி தீர்த்த தம்பி, ஊர்மக்களின் முன்பு போலீஸில் சரணடைந்தார்.

தஞ்சை அருகில் உள்ள துலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுளுக்கி மணி என்பவரை அதே ஊரை சேர்ந்த சுபாஷ் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு சியாமளாதேவி அம்மன் கோவில் திருவிழாவின் போது வெட்டி கொலை செய்தார். இதனால், மணியின் தம்பி ஜோதிராஜன் சுபாஷை பழி தீர்க்க காத்து இருந்தார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சியாமளா தேவி அம்மன் கோவில் திருவிழா 12ம் தேதி கிடாவெட்டுடன், மஞ்சள் தெளிப்பு விழாவோடு சிறப்பாக நடந்தது. விழாவில் சுபாஷ் அருவாளை காட்டி ஊர் மக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஊர் திருவிழாவில் சுபாஷை கண்ட ஜோதிராஜன், இதே விழாவில் தனது அண்ணன் மணியை கொலை செய்த சபாஷை பழிதீர்க்க திட்டமிட்டார்.

ஊர்மக்களை மிரட்டி வந்த சுபாஷை ஜோதிராஜனும், அவரது மைத்துனர் சிவக்குமாரும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து பழி தீர்த்தனர். பின்னர் ஊர் மக்கள் மத்தியில் போலீசாரிடம் அருவாளை கொடுத்து ஜோதிராஜன் சரணடைந்தார். பின்னர் ஜோதிராஜன், சிவக்குமார் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?