ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை : சடலத்தை காட்டில் எறிந்து விட்டுச் சென்ற கொடூரம்..!!!
Author: Babu Lakshmanan26 October 2021, 2:34 pm
தஞ்சை : பாபநாசம் அருகே ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் அடுத்த அம்மாப்பேட்டை சூரியக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சிவலிங்கம் விவசாயி. இவரது மனைவி சரோஜா. இவருக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகள் கனகவல்லி (33) ஆடு மேய்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து ஆடுகளை ஓட்டி மேய்ச்சலுக்காக சென்றுள்ளார்.
வழக்கமாக ஆடு மேய்க்கச் சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டங்காடு – வடவாறு கரையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் டிஎஸ்பி பூரணி, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த கனகவல்லி என் தலையில் வெட்டுக்காயம் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அந்தப் பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0