மதுபோதையில் தகராறு… டாஸ்மாக் கடை முன்பு இளைஞரை அடித்தே கொன்ற கும்பல் ; பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 12:57 pm
Quick Share

தஞ்சாவூர்: மது போதை தகராறில் வாலிபரை சிலர் அடித்தே கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை அருகே உள்ள சானூரப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், ஹரிஹரன் தஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றார். அப்போது, அவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே மது குடித்துக் கொண்டிருந்த சிலரிடம் மது எங்கே கிடைக்கும் என கேட்டுள்ளார்.

மேலும் படிக்க: இதுக்கு மேல போன கலவரம் வெடிக்கும் பிரதமர் மோடியை தடுத்து நிறுத்துங்க.. ஐகோர்ட்டில் செல்வப்பெருந்தகை போட்ட வழக்கு

இதில் குடிபோதையில் இருந்த நபர்களுக்கும், ஹரிஹரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஹரிஹரனை சரமாரியாக தாக்கினர். இதில் கீழே விழுந்து காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளதால் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 272

0

0