10 சாட்டையடி: பேய் ஓட்டும் வினோத திருவிழா: தருமபுரி கோவிலில் வருடம் தோறும் நிகழும் ஆச்சரியம்….!!
Author: Sudha7 August 2024, 12:56 pm
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோவில் தேர் திருவிழாவில் நடைபெறும் ஒரு சடங்கில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன் தொல்லை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினைகள் உள்ளவர்கள், அம்மனை மனம் உருகி வேண்டிக்கொண்டு தரையில் படுத்து இருப்பர்,அவர்களை அம்மன் தன் காலால் மிதித்துச் சென்றால் தங்கள் பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்தபோது பூங்கரகம் சுமந்து வந்த பூசாரி பக்தர்கள் மீது நடந்து சென்று அருளாசி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சாட்டையடி பூஜை நடைபெற்றது.பில்லி சூனியம் , ஏவல் , பேய் பிடித்தவர்கள் இதில் சாட்டையடி வாங்கினால் பேய் பிசாசு ஓடும் என அதிகமாக பார்க்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் இதில் தாமாக முன்வந்து பூசாரியிடம் 10 சாட்டையடி பெற்று சென்று பச்சையம்மனை மனம் உருகி வேண்டி வழிபாடு செய்தனர்.
0
0