கணவனை இழந்த மகள் செய்த செயல்.. தாய் செய்த விபரீத காரியம் : அதிர்ந்து போன கோவை!!

12 July 2021, 10:28 am
Daughter Killed By Mother - Updatenews360
Quick Share

கோவை : கோவை காரமடை பகுதியில் பெற்ற தாயே மகளின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காரமடை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நாகமணி (47). இவருக்கு மகாலட்சுமி (எ) நதியா (வயது 31)என்ற மகள் உள்ளார். இந்த நதியாவிற்கு 13 வயதுள்ள மகளும், நிதீஷ் குமார் என்ற 12 வயதுடைய மகனும் உள்ளனர். இந்நிலையில் சரவணகுமார் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

சரவணகுமார் இறந்ததிலிருந்து நதியா தனது தாய் வீடான கணுவாய்ப்பாளையம் பகுதியில் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நதியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும், இதனால் அவருடைய குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை என்றும், நாகமணி தன்னுடைய பேரக்குழந்தைகளை தானே வளர்ப்பதாக மகாலட்சுமியை கண்டித்து வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் தனது தாயார் வீட்டிற்கு வந்தும் நதியா அதிகமாக செல்போனில் பேசுவதை விடவில்லை எனவும்,இதன் காரணமாக நதியாவிற்கும், அவருடைய தாய் நாகமணிக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதனால் நேற்று இரவு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவரும் படுத்து உள்ளனர். இந்நிலையில் ஆத்திரம் அடங்காத தாய் நாகமணி இன்று அதிகாலை சுமார் 12.30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை குளவிக்கல் (மாவு ஆட்டும் கல்) மூலம் பின்னந்தலையில் தலையில் தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையில் இருந்து விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும்,சம்பவ இடத்தை மேட்டுப்பாளையம் டிஎஸ்பி ஜெய்சிங் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், தாய் நாகமணியை கைது செய்த காவல்துறையினர் அவரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 139

2

0