செய்யாத வேலைக்கு ரூ.1.5 லட்சம் செலவு செய்ததாக விளம்பர பலகை.. பொதுமக்கள் ஷாக் : சிக்கும் முக்கிய தலைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 8:03 pm

செய்யாத வேலைக்கு ரூ.1.5 லட்சம் செலவு செய்ததாக விளம்பர பலகை.. பொதுமக்கள் ஷாக் : சிக்கும் திமுக நிர்வாகிகள்!!

தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி கிராமம் 11 வது வார்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பெரும்பாலானோர் அரசு துறையில் பணியாற்று வருகின்றனர்.

இந்தப் பகுதியில் குடிநீர் இணைப்பு தெருவிளக்கு சாலை வசதிகள் எதுவும் செய்யாத நிலையில் திடீரென அப்பகுதியில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் இணைப்புக்காக பிவிசி லைன் ஏற்படுத்தியதாக வைத்த பெயர் பலகையை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ந்தனர்.

செய்யாத வேலைக்கு பெயர் பலகையா என கேள்வி எழுப்பி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடி 11 வது வார்டு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி குடிதண்ணீர் இணைப்பிற்காக ஐயாயிரம் ரூபாய் அரசுக்கு ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்தாரும் டிடி எடுத்த அனுப்பியும் அதனை வேறொரு பணிக்காக நிதியை செலவு செய்து விட்டதாகவும் மீண்டும் 2000 டீடி எடுக்க சொல்லியும் பதறியும் எடுத்து அனுப்பியதாகவும் .

இருந்த போதும் தாங்கள் கொடுத்த நிதியினை நல்ல குடிதண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தாமல் அப்பகுதி மக்கள் குடி தண்ணீர் இன்றி விலை நீர் வாங்கி பயன்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

அனைத்து வரிகளையும் அரசு அலுவலர்களுக்கு தேதி தவறாமல் ஓடிச் சென்று கட்டிய தங்களுக்கு எந்த வசதியும் கிடைக்காததால் பரிதவிப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்யாத வேலைக்கு வைக்கப்பட்ட பெயர் பலகை அப்பகுதி மக்களை போராட்டத்தில் இறங்க வைத்துள்ளது.

தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்தின் போது பஞ்சாயத்து தலைவர் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது எனக்கு எதுவும் தெரியாது என்றும் எனது வீட்டுக்கார் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு தெரிவித்து தொலைபேசி துண்டித்து விட்டார்.

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற கிளர்க் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த பகுதியில் ஏற்கனவே நாங்கள் குடிநீர் வசதி அமைத்து விட்டோம் என்று அதற்காக விளம்பரப் பலகை வைத்துள்ளோம் என்று அதை நீங்கள் பார்க்கவில்லையா என்று சொல்லி கைபேசியை துண்டித்து விட்டார்.

இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி. ஷஜீவனா அவர்களின் தொடர்பு கொண்டு கேட்டபோது இது போன்ற புகார் எனக்கு வரவில்லை. உடனடியாக இதுபோன்ற புகார் வந்தால் தப்பு செய்த பஞ்சாயத்து தலைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்தார்.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!