நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக..!!
Author: Rajesh1 பிப்ரவரி 2022, 10:52 காலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், பாஜக சார்பில் களம்காணும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், வேலூர், தஞ்சை, கடலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 14 மாநகராட்சிகளில் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், திருச்செங்கோடு, நாமக்கல், தருமபுரி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பாலகோடு, நாட்றாம்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.
14 மாநகராட்சிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக, சென்னையில் முதல் கட்டமாக 141 வார்டுகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.
0
0