காதல் முறிந்த சோகம் : காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்..!!

Author: Rajesh
1 February 2022, 11:07 am

கோவை: காதல் தோல்வியில் இருந்த வாலிபர் ஒருவர் காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் மதினபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண படா. இவரது மகன் சுரஜித் கட்டுவா (28). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த சுரஜித், டவுன்ஹால் பகுதியில் உள்ள தியாகி குமரன் வீதியில் தங்கி நகை வடிவமைப்பு வேலை செய்து வந்தார்.

இதனிடையே மேற்கு வங்கத்தில் உள்ள ரத்தினா என்ற பெண்ணும், சுரஜித்தும் காதலித்து வந்தனர். சுரஜித் தனது காதலியின் ஞாபகமாக, அவரது துப்பட்டாவை தன்னுடனேயே வைத்திருந்தார். இருவரும் செல்போனிலேயே தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், ரத்தினாவுக்கும் சுரஜித்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தினா தனது காதலை முறித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், சுரஜித் மன வேதனையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று தனது அறையில் தனியாக இருந்த சுரஜித், காதலியின் துப்பட்டாவில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் வெரைட்டி ஹால் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுரஜித்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 2120

    0

    0