புதர் மண்டிய பகுதியில் இருந்து அழுகிய நிலையில் 40-வயது மிக்க ஆண் சடலம் கண்டெடுப்பு – போலீசார் விசாரணை..!

11 September 2020, 9:13 am
Quick Share

கோவை: கோவை பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு முட்செடி மற்றும் செடிகள் அதிகம் வளர்ந்த நிலையில் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்று உள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வருவதை கண்டு நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில் என்ற ஊழியர் ஆதியப்பன் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கிணற்றில் தவறி விழுந்த இறந்தாரா? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0