பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு…

Author: kavin kumar
23 January 2022, 6:19 pm
Quick Share

திருவள்ளூர் : பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் விஜயன் 30 இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும் குகன்(7) என்ற மகன் சுப்ரியா(5) என்ற மகளும் உள்ளனர்.

இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்துவரும் நிலையில் நேற்று விஜயன் வழக்கம் போல் பூண்டி ஏரியில் படகில் மீன் பிடிக்க சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சுமார் 12 மணி அளவில் பூண்டி ஏரியில் அவரது உறவினர்கள் சென்று தேடி பார்த்தபோது படகு மட்டும் தணியாக இருப்பதையும் விஜயன் மாயமாகிஉள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயன் உடலை தேடிவந்த நிலையில் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் விஜயன் உடலை சடலமாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • selva நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம்.. அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஒரு நியாயமா : கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை!
  • Views: - 4990

    0

    0