வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிக்கப்படவில்லை : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

Author: kavin kumar
23 January 2022, 4:59 pm

புதுச்சேரி : மக்களின் வாழ்வாரதத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 பிறந்த தினத்தை முன்னிட்டு லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் அனைத்து மாநிலங்களில் போல் தான் கொரோனா உள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,

புதுச்சேரி மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தான் தளர்வுகளோடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவர்களை தன்னை சந்தித்ததாகவும்,

அப்போது ஜிப்மரில் 60% மருத்துவர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தட்டுப்பாடால் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பதில் சிறுமம் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் எப்படி இருப்பினும் வெளிபுற நோயாளிகளுக்கான சேவைகள் தொடர வேண்டும் என கேட்டு கொண்டதை அடுத்து அவர்கள் ஒப்புதல் உடன் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

  • rajinikanth increased his salary on jailer 2 எக்குத்தப்பாய் சம்பளத்தை ஏத்திய ரஜினிகாந்த்? ஸ்தம்பித்துப்போன சன் பிக்சர்ஸ்?