முழு ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை : வருவாய் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை

Author: kavin kumar
23 January 2022, 4:21 pm
Quick Share

திருவள்ளூர் : பழவேற்காட்டில் முழு ஊரடங்கை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை வருவாய் கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சமூக விரோதிகள் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சிலர் வருவாய் கோட்டாட்சியரை கண்டதும் மதுபாட்டில்களை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து மதுபானங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் வருவாய் கோட்டாட்சியர் செல்வம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

Views: - 1952

0

0