நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த பெண் சடலம் ; கோவையில் பகீர் சம்பவம்… போலீசார் விசாரணை..!

Author: Babu Lakshmanan
16 November 2022, 9:37 pm

கோவை ; கோவையில் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மேகலபிரியா. 26 வயதான இவர், கடந்த ஓராண்டாக கோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோ பெர்க் டயாக்னசிஸ் செண்டரில் பணியாற்றி வந்துள்ளார். ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

நேற்று இரவு வழக்கமாக பணிக்கு சென்று இரவு அறைக்கு வந்துள்ளார். இன்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டார் கதவை தட்டியபோது திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது நிர்வான கோலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து, அவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கோவைக்கு வந்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. காதல் பிரச்சினை காரணமாக பெண் தற்கொலையில் ஈடுபட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் கொலை சம்பவங்கள் இருந்ததா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?