திருமூர்த்தி அணையில் செத்து மிதந்த யானையின் சடலம் : இறந்து பல நாட்களாகியிருக்கலாம் என வனத்துறை சந்தேகம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 October 2021, 11:57 am
திருப்பூர் : உடுமலைபேட்டை திருமூர்த்தி அணையில் இறந்து மிதக்கும் குட்டியானை இறந்து பல நாட்கள் ஆகியும் அப்பகுதியில் யாருக்கும் தெரியாத நிலையில் அவ்வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
திருமூர்த்தி அணையின் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆட்கள் நடமாட்டம் பெரிதாக இல்லை.
இதனால் அணையின் தண்ணீருக்குள் மிதந்து கிடந்த யானை யாருக்கும் தெரியவில்லை. அமராவதி வன சரகத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி அணையில் யானை இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.
இதனை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உடல் கூர் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். பின்பு வன அதிகாரிகள் மற்றும் தளி பேருராட்சியினர் உடனடியாக யானையின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
0
0