ஆசை வார்த்தை கூறி சிறுமியை பைக்கில் கடத்தி சென்ற வாலிபர் : பாதி வழியில் மறித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 9:37 am
Minor Girl Kidnap Arrest -Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதி பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய பள்ளி மாணவியை மருதம்பள்ளம் கிராமம் கீழவேளியை சேர்ந்த ஐயப்பன் என்பவன் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளான்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சிறுமியை அங்கு வந்த ஐயப்பன் ஆசை வார்த்தைகளை கூறி தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளான். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் சிறுமியை கடத்திச் சென்ற ஐயப்பனை பாதிவழியில் ஊர்மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர் .

பின்னர் சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐயப்பன் மீது புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் ஐயப்பன் மீது கடத்தல் மற்றும் போக்சோ வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடமிருந்து சிறுமியை மீட்டு பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 273

0

0