கூட்டாஞ்சோறு சமைக்க சானிடைசர் பயன்படுத்திய சிறுவன் : உடலில் தீ பற்றி பரிதாப பலி!!

8 July 2021, 8:19 pm
Sanitizer Fire - Updatenews360
Quick Share

திருச்சி : கூட்டாஞ்சோறு சமைத்த போது சானிடைசர் பயன்படுத்தப்பட்டதில் தீ பரவி சிறுவன் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஈபி ரோடு பகுதியில் உள்ள விறகுபேட்டை பாரதி நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் ஸ்ரீராம் (வயது 13). மேரிஸ் தோப்பு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து உள்ளனர்.

அப்போது அடுப்பை பற்ற வைப்பதற்காக சானிடைசரை ஊற்றி பற்ற வைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக சானிடைசர் கொளுந்து விட்டு எரிந்தேதாடு, பாட்டிலை கையில் வைத்திருந்த ஸ்ரீராம் மீதும் தீ பரவியது.

இதில் உடல் முழுவதும் தீபற்றி எரியவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடலில் பற்றிய தீயை அணைத்து உள்ளனர். சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 167

0

0