சாலைக்கு வந்த சரக்கு ரயில்… நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் : காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan3 அக்டோபர் 2023, 9:12 மணி
சாலையில் வந்த சரக்கு ரயில்… நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் : காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!!
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரத்தில் தடம்புரண்டது.
காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்தது சரக்கு ரெயில்.
சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Views: - 403
0
0