நடிகை குஷ்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

Author: Udayaraman
6 October 2020, 8:29 pm
Quick Share

சென்னை: நடிகை குஷ்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளில் செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து  படுகொலை செய்ததை கண்டித்து நேற்று சென்னை பெரம்பூர் இரயில் நிலையம் எதிரே வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்யாகிரக அறவழி அமர்வு என்ற பெயரில் அறவழி போராட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி. முன்னாள் எம்.எல்.ஏ பலராமன், விஜய் வசந்த் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன் அனுமதி வாங்காதது, தடையை மீறி ஒன்று கூடியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் செம்பியம் காவல்நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு, வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 38

0

0