ஓடும் பேருந்தில் புகைப்பிடித்த நடத்துநர்… போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும் தானா..? சமூக ஆர்வலர்கள் கேள்வி..?

Author: Babu Lakshmanan
1 May 2023, 2:25 pm

பழனியில் அரசு பேருந்தில் புகைப்பிடித்த படி படியில் நின்ற பேருந்து நடத்துனர் குறித்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும்தானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பழனியில் இருந்து தேனிக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து கிளம்பிச் சென்றது. பழனி நகரில் இருந்து புறநகர் பகுதிக்கு பேருந்து சென்ற நிலையில், பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத நிலையில், பேருந்தின் பின்புற படிக்கட்டில் நின்று கொண்டு பேருந்து நடத்துனர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மோட்டார் வாகன சட்ட விதிகள் இதுபோல் பணியில் உள்ளபோக்குவரத்து ஊழியர்களுக்கு பொருந்தாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பணியின் போது பேருந்தில் புகை பிடித்த நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • tvk reference in tourist family movie தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?