யார் பெரியவர் என்பதில் இருதரப்புக்கு இடையே மோதல்… சிறுவன் வெட்டிப் படுகொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2024, 1:55 pm

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீயனூர் கிராம கண்மாய் அருகே இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடப்பதாக வந்த தகவலை அடுத்து மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவர் கீழப்பசலையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பிரவீன் என கண்டறியப்பட்டது.

கொலைக்கான காரணம்

மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை, சங்கமங்கலம் ஆகிய கிராமங்களில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெருவாரியாக வசிக்கின்றனர்.

இரு கிராமங்களில் யார் பெரியவர் என இளைஞர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு. இது தொடர்பாக இரு கிராம பெரியவர்களும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்ட நிலையில் மானாமதுரை நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் பணியாற்றி வந்த சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (26) என்பவரை கடந்த மார்ச் 9ம் தேதி பட்டபகலில் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது.

இதில் சசிகுமாரின் வலது கை மணி கட்டு துண்டாகியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கீழப்பசலையைச் சேர்ந்த அஜய், முத்துராமு, சுஜி, மணி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் இரு கிராமத்தின் இடையே மேலும் பகையை வளர்த்தது. இந்நிலையில் கீழப்பசலை யை சேர்ந்த ராஜா மகன் பிரவின் (17) நேற்று கோவையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இரவு 9 மணியளவில் நண்பருடன் டூ வீலரில் சென்ற பிரவீனை 2 டூ வீலர்களில் வந்த 6 பேர் கடத்தி சென்று தீயனூர் கண்மாயில் வைத்து நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் கழுத்திலும் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

இரவு முழுவதும் போலீசார் மற்றும் கீழப்பசலை கிராம மக்கள் பிரவினை தேடி வந்துள்ளனர். . நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பிரவீனுக்கு எந்த தொடர்பும் இல்லாத நிலையில் இன்று அவர் கொலை செய்யப்பட்டிருப்பது பகையை வளர்த்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கீழப்பசலை கிராம மக்கள் மதுரை – ராம்நாதபுரம் 4 வழிச்சாலையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!