கால்வாயில் கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக கிடந்த கர்ப்பிணியின் சடலம்… உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 4:00 pm

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி தேவி (வயது 32) மற்றும் ஒரு மகள் உள்ளன. தேவி கர்ப்பிணியாக உள்ளார். தேவி சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தேவி நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் நேற்று காலை சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என கணவர் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று திருமங்கலம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியுள்ளது. உடனே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் உள்ள அடைப்பை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கால்வாய் சிலாப்க்கு அடியில் பெண் இறந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ஏஎஸ்பி உதயகுமார் தலைமையிலான போலீசார் கால்வாய் சிலாப்க்கு அடியில் சிக்கி கொண்ட சடலத்தை கடப்பாரை கொண்டு சிலாப்பை அகற்றி பார்த்தபோது கால்வாயில் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கர்ப்பிணியாக இருந்த தேவியை கால்கள் கட்டி, நிர்வாணமாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: போக்கு காட்டிய சிறுத்தை : வனத்துறை வைத்த கூண்டு.. 5 நாட்களுக்கு பின் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!