செம போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநர்.. கேள்வி கேட்ட இளைஞரை கொத்தோடு அள்ளி அசுர வேகத்தில் சென்ற காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 5:36 pm

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பவுடர் கம்பெனியிலிருந்து சென்னைக்கு சென்ற லாரி புதுச்சேரியில் இருந்து கோட்டகுப்பம் இசிஆர் சாலையில் தாறுமாறாக சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் பார்த்து அந்த லாரியை நிறுத்த முற்பட்ட பொழுது அந்த லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் லாரியை நிறுத்தாமல் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தார்.

உடனே ஒரு இளைஞர் லாரி ஓட்டுநர் ஏறும் பக்கவாட்டு பகுதியில் ஏறி தொங்கியபடியே ஓட்டுனரை லாரியை நிறுத்தமால் போற, குடிச்சிருக்கியா என கேட்டார்,

லாரியில் ஏறிய இளைஞர் இறங்குவதற்குள் புயல் வேகத்தில் லாரியை கிளப்பியுள்ளார் அந்த போதை ஓட்டுநர். நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் நிறுத்தாமல் சென்று கொண்டு இருந்தார்.

இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த லாரியை போலீசார் உதவியுடன் மடக்கிப் பிடித்து குடிபோதையில் தாறுமாறாக லாரியை ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் குடிபோதையில் லாரி யை தாறுமாறாக ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!