அதிவேகமாக சொகுசு காரில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் : சாலையோர கடைக்குள் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 8:15 pm
Cbe Car Accident - Updatenews360
Quick Share

நேற்று இரவு மது போதையுடன் சொகுசு காரில் வேகமாக வந்த இளைஞர்கள் சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. இரவு நடந்த இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கோவை காளப்பட்டி, குரும்பபாளையம் சாலையில் நேற்று இரவு 9:30 மணிக்கு அதிவேகமாக வந்த சொகுசு கார் சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் கடையில் இருந்த நான்கு பேர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சாலையில் இருந்த நான்கிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீதும் சொகுசு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிய வருகிறது.

இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கூறும்போது, சொகுசு காரில் நான்கு இளைஞர்கள் மது போதையில் இருந்ததாகவும், மது போதையில் வேகமாக காரை இயக்கியதால் விபத்து நடந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த கோவில் பாளையம் காவல்துறையினர் இந்த விபத்துக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் சொகுசு காரில் மது போதையில் விபத்து நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Views: - 121

0

0