உயிரை காவு வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு.. பெற்ற ஒரு மகனையும் இழந்த பெற்றோர்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2024, 10:49 am

உயிரை காவு வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு.. பெற்ற ஒரு மகனையும் இழந்த பெற்றோர்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளன் பேட்டை காலனி தெருவை சேர்ந்த தேவேந்திரன்- சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள் மற்றும் 20 வயதுடைய ஒரே மகன் அஜித் குமார் உள்ளனர்.

இந்த நிலையில் அஜித்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் உமா தம்பதியரின் 15 வயது மகன் பிரபாகரன் உள்ளிட்ட நண்பர்களுடன் அருகே உள்ள வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர்.

அப்பொழுது விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பிரபாகரன் கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்திய சவுக்கு மரத்தில் ஆன ஸ்டெம்ப்பால் அஜித் குமாரின் நெற்றி பொட்டில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் மயங்கி விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அஜித் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர்.அப்பொழுது அஜித்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர் அஜித் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அஜித்குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: கட்சிக்கு தொடர்பில்லை என சொல்லி தப்பிக்க முடியாது : சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்கணும்.. வானதி சீனிவாசன்!

அஜித் குமாரின் உடன் பிறந்த சகோதரிகள் மூவருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில்.. மற்ற மூன்று சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.. ஒரே ஆண் மகனான அஜித்குமார் இறந்ததில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!