ஜாமீனில் வெளியே வந்த 3 பேரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2021, 6:11 pm
Murder Attempt CCTV -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : அம்பத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 3 பேரை ஓட ஓட விரட்டிய கும்பல் அரிவாளால் வெட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூரை சேர்ந்தவர் அரவிந்தன். இவரை கடந்த 2018ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையி, அந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் மணி மற்றும் திருமுல்லைவாயலை சேர்ந்த ஆகாஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிரசாத், மணி மற்றும் ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் நேற்று நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக சென்று பாடி மீன் மார்க்கெட் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இதையறிந்த அரசிந்தனின் தந்தை ரவி, சகோதரர்கள் அப்பன்ராஜ், விவேக் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த மூன்று பேரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் அரிவாளால் வெட்டிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 253

0

0