லாரி ஓட்டுநரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பல் : சிசிடிவிவை வைத்து சேஸ் செய்த போலீஸ்.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 8:00 pm
Lorry
Quick Share

வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணாட்சி (எ) முத்துகிருஷ்ணன் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார் கடந்த 22-ஆம் தேதி காலை லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சத்துவாச்சாரி நோக்கி வந்து கொண்டிருந்தார்

இந்த நிலையில் சத்துவாச்சாரி ஆவின் அருகே சர்வீஸ் சாலை வந்த போது லாரி பழுதானது இதனால் லாரியை முத்துகிருஷ்ணன் அருகே உள்ள மெக்கானிக் ஷாப் அருகில் நிறுத்தியுள்ளார் பின்னர் அவரும் கிளினரும் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது அதே சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென முத்துக்கிருஷ்ணனை சுற்றி வளைத்து சராமாரியாக கத்தியால் வெட்டியது.

இதில் தலையிலும் கைகளிலும் வெட்டுப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் கைவிரல்கள் துண்டானது அதே நேரத்தில் தாக்குதலை நடத்திய கும்பல் மின்னல் வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர்

இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்து கீழே சாய்ந்த முத்துகிருஷ்ணனை உடனடியாக அங்கு இருந்து அவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கைகளில் பட்டாக்கத்தியுடன் வந்து லாரி ஓட்டுநரை பட்டாகத்திகளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திது

இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் ஏரியூரை சேர்ந்த சக்திவேல்,
மணிகண்டன், அசோக், ஆகிய மூன்று பேரையும் கைது கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில் சக்திவேலின் உறவினர் ஒருவரை முத்துகிருஷ்ணன் மற்றும் அவர்களின் தரப்பினர் தாக்கியுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தரப்பினர் முத்துகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது

மேலும் படிக்க: கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது!

மேலும் சில நாட்களுக்கு முன்பு நடந்த திரௌபதி அம்மன் திருவிழாவில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சனையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

Views: - 188

0

0