என் மேலயே கை வைக்கறியா? உன் பொண்டாட்டி உசிரோட இருக்க மாட்டா : ஓடும் ரயிலில் பயணிகளை மிரட்டிய கும்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 6:42 pm

கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரமாபிரபா. இவர்கள் சென்னையில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு கேரள மாநிலம் செல்லும் 22639 எண் கொண்ட அலெப்பி விரைவு ரயிலில், திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் 6 இளைஞர்கள் முன்பதிவு ரயில் பெட்டியில் ஏறி, கழிவறை அருகே நின்றுக்கொண்டு புகைப்பிடித்து கொண்டும், அதிக ஒலியில் சினிமா பாடல்கள் பாடியவாறு ஆட்டம் ஆடி கொண்டு வந்துள்ளனர்.

இதனால், அந்த பெட்டியில் உறங்கி கொண்டிருந்த ரயில் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.இந்நிலையில் ரமாபிரபா அந்த இளைஞர்களிடம் கைக்குழந்தைகள் பெரியவர்கள் எல்லாம் இருப்பதால் அமைதியாக வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு செவி சாய்க்காத அந்த இளைஞர்கள் ரமாவிடம் தகராறில் ஈடுபட துவங்கி உள்ளனர். மேலும் மணிகண்டனைய தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமா, ரயில் பயணித்து கொண்டிருந்த அவரது தம்பியை அழைத்துள்ளார். அந்த இளைஞர்கள் அவரது தம்பியையும் தாக்கி தகராறு செய்துள்ளனர்.

பின்னர் திருப்பூர் ரயில் நிலையத்தில் அந்த இளைஞர்கள் இறங்கி சென்றுள்ளனர்.இச்சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த ரமாபிரபா, ரயிலில் நடந்த சம்பவத்தை விவரித்தார். மேலும் இளைஞர்கள் தகராறில் ஈடுபடும் போது அருகில் இருந்த ஓரிருவர் மட்டுமே உதவிக்கு வந்ததாகவும் பலரும் உதவ வரவில்லை என்றார்.

மேலும் நேற்றைய தினம் ரயிலில் ரயில்வே போலிசாரும் இல்லை என வருத்தம் தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்டது தமிழ் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் என குறிப்பிட்ட அவர் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!