தேக்கமடைந்த பணிகளை விரைந்து நிறைவேற்றுவதே இலக்கு : பொறுப்பேற்க உள்ள கோவை மேயர் உறுதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 2:58 pm

கோவை : கோவையில் தேங்கிய நிலையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன் என கோவை மேயராக பொறுப்பேற்க உள்ள கல்பனா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், செய்தியாளர்களிடம் மேயர் வேட்பாளர் கல்பனா பேசும்போது, “2000 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுகவில் வெற்றி பெற்றேன். என்னை கோவை மாநகர மகளிர் மேயராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு என் நன்றிகள். மணியகாரம்பாளையம் பகுதி-19 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி. கோவை மாவட்டத்தில் தேங்கிய நிலையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன்.” என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!