17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடுத்த நடந்த பயங்கரம்.. விசாரணையில் சிக்கிய திருமணமான வாலிபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 9:04 pm

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சூரியகுமார் திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவருடன் சூரிய குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி சூரியகுமார் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்க வைத்திருக்கின்றார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஒட்டன்சத்திரம் விரைந்து சென்று சூரியகுமாரையும் சிறுமியையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் சூரிய குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று குழந்தை இருப்பதும் , சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று விடுதியில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தெற்கு மகளிர் காவல் துறையினர் சூரிய குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!