வீடு புகுந்து பெண்ணிடம் தவறாக நடந்த கூலித் தொழிலாளி.. நீதிமன்றம் கொடுத்த கடுமையான தண்டனை!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 2:44 pm

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் 43 என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 12.05.2017 ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில் பேரளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்த நிலையில் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ராஜகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

மேலும் விசாரணை முடிந்து நீதிமன்ற குற்றவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நன்னிலம் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வழக்கின் தீர்ப்பில் ராஜகுமாருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கை உடனடியாக விசாரணை மேற்கொண்டு கைது செய்து குற்ற அறிக்கை தாக்கல் செய்த நீதிமன்ற விசாரணை முடித்து தண்டனை பெற்றுத் தந்த பேரளம் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்

மேலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளையும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளையும் விரைந்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!