வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… விசாரணையில் சிக்கிய தங்கையின் கணவர் : தூத்துக்குடியில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 2:37 pm

வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… விசாரணையில் சிக்கிய தங்கையின் கணவர் : தூத்துக்குடியில் பயங்கரம்!

தூத்துக்குடி அண்ணா நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபரான இவர் அந்தப் பகுதியில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது தங்கை கணவரான கோவில்பட்டியில் வசித்து வரும் கோபி நாதன் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது .

இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது இந்நிலையில் செந்தில்குமார் நேற்று இரவு மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது மறைந்திருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேருக்கு மேற்பட்ட கும்பல் அவரை சரமாரியாக ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்கு பின் எல்லாமே மாறும்.. ஆட்சியும் மாறும்.. அதிமுகவில் காட்சியும் மாறும் ; அமைச்சர் ரகுபதி கணிப்பு!

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் சொத்து தகராறுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்சனை காரணமாக நடைபெற்றதா என்று கோணத்தில் தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.. அதன் பின், ஜூன்னா என்ற மோப்ப நாய் கொண்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?