உங்க சண்டைல அந்த குழந்தை என்னயா பாவம் பண்ணுச்சு : 5 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தும் தாய்…!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 5:44 pm
Mother Beaten Child -Updatenews360
Quick Share

புதுச்சேரி : 5 வயது பெண் குழந்தையை தாய் அடித்து துன்புறுத்தும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி காவல்துறையின் (IRBN) பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ் என்பருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாந்தி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு வர்னிகா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளது.

இதனிடையே கடந்த 6 மாதங்களும் முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கணவனை பிரிந்து சாந்தி தனது தாய் மற்றும் மகள் வர்னிகாவுடன் வசித்து வரும் நிலையில் குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் குழந்தையை மீட்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 1052

0

0