முன்பதிவில் பீஸ்ட் படத்தை விட கெத்து காட்டும் KGF-2 – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Author: Rajesh
7 April 2022, 5:10 pm
Quick Share

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் PAN INDIA மூவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி படத்தின் வெற்றியை தடுக்கும் முனைப்பில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பில் உள்ள KGF 2 படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே KGF முதல் பாகம் வெளியாகி வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல், இந்தியாவே திரும்பி பார்க்க வைத்தது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

KGF Chapter 2': Yash releases the power-packed first song 'Toofan' - WATCH

இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் மக்கள் எப்போதும் நல்ல படங்களுக்கு தங்கள் ஆதரவுகளை தந்து வருவார்கள். அந்த வகையில் கே ஜி எப் 2 படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர், அந்த வகையில் கே ஜி எப் 2 புக்கிங் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் பீஸ்ட் வருவதால் 85 சதவீதம் திரையரங்குகள் விஜய் படத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

கே ஜி எப் 2 மிச்சமுள்ள தியேட்டரில் வந்தாலும் புக்கிங் ஓபன் செய்ய செய்ய ஹவுஸ்புல் காட்சிகள் தான் அனைத்து ஏரியாக்களிலும். இதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஒருவேலை இந்த படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அதிக திரையரங்கு கிடைக்கும், இதனால் விஜய்யின் பீஸ்ட் படத்தின் லசூல் பாதிக்கப்படும் என்பதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 644

8

4